Header Ads



கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை முற்றுகையிடுவோம் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு எதிராக கடும் முற்றுகைப் போராட்டங்கள் உள்நாட்டிலுள்ள அந்த நாடுகளின் தூதரகங்கள் முன்னால் மேற்கொள்ளப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு விசாரணை பொறிமுறையினை கண்காணிக்க சர்வதேச குழுவினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்பன வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான வசந்த பண்டார கூறுகையில்:

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பல தீய சக்திகள் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. நாட்டிற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதனை கண்டித்து தலைநகரில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இறுதிவரை பிரேரணையை தோல்வியடைய செய்து போராட வேண்டும். 

சர்வதேச கண்காணிப்பு குழுவொன்றுக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறனதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் பாரிய சர்வதேச தலையீடுகளே ஏற்படும்.எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சிவில் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனக்கூறினார். ___

No comments

Powered by Blogger.