Header Ads



யேசுநாதர் கல்லறையை கண்டுபிடித்தார்களாம் - பழையை பைபிள் கண்டுபிடிப்பை மறைக்க முயற்சி


(துருக்கியில் அண்மையில் பழைய பைபிள் - இன்ஜில் வேதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதில் முஹம்மது நபியின் வருகை குறித்தும் கூறப்பட்டிருந்தது. துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பழைய பைபிளை கைப்பற்ற வத்திக்கான முயன்றுவருகிறது. இவ்வாறான நிலையில்தான் அமெரிக்கா மற்றும் யூத கூட்டங்கள் யேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது)

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தபோர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் பகுதியில் உள்ள கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்லறையை ஆய்வு செய்தனர். நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் உள்ள இந்த கல்லறை கி.பி. 70-ம் ஆண்டு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. 

இங்கு இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.   இந்த கல்லறையில் சுண்ணாம்பு கல்லால் ஆன பெட்டி உள்ளது. அதில் “புனித ஜெகோவா விழித்தெழு” என கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதை போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் “ஜோனே” என்ற தேவதூதனின் கதையாகும். கல்லறை பெட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், மீனின் உருவம் போன்றவை “உயிர்த்தெழுதல்” என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையை காட்டும் வகையில் உள்ளது.   இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இக் கல்லறை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கல்லறைகளை தோண்ட யூதக்குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு அக்கல்லறையை தோண்ட அகழ்வாராய்ச்சியாளர் ஜேம்ஸ் தபோர் குழுவினர் அனுமதி பெற்றனர். அதை தொடர்ந்து கல்லறையை தோண்டுவதற்கு பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் எந்திரக்கைகள் பொருத்தப்பட்ட கேமிராக்களை துளைகள் வழியாக கல்லறைக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர். 

No comments

Powered by Blogger.