Header Ads



உலகின் அச்சுறுத்தல் எது..?


இஸ்ரேலும் அமெரிக்காவும் முக்கிய அச்சுறுத்தல்கள் என்று 73 சதவீத அரேபியர்கள் கருதுவதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அரபு ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையம் (ACRPS) நடத்திய கருத்து கணிப்பில் 51 சதவீதம் பேர் இஸ்ரேலும் 22 சதவீதம் பேர் அமெரிக்காவும் அரபு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 5 சதவீத மக்கள் மட்டுமே ஈரான் அரபு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு  நாடுகளில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவில் பலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல் தந்திரமாக செயல்படுவதாக 84 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மத்திய கிழக்கு பகுதியை அறிவிக்க கோரி 55 சதவீதம் பேரும் இதற்கு எதிராக 29 சதவீதம் பேரும் மேலும் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.