சண்டித்தன அமைச்சர் மேர்வின் சில்வா மீது ஒழுக்காற்று நடவடிக்கை
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment