மேற்கு நாட்டு ஊடகங்களின் செயற்பாடு நல்லிணக்கத்துக்கு ஆபத்து - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை
இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சனல்-4 தொலைக்காட்சி மற்றுமொரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. அருவருக்கத்தக்க வகையில் ஊடகவியல் புரிந்துவரும் சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் தலையீடும் கர்வம் மிக்க மேலைத்தேய ஊடகங்களின் மற்றுமொரு செயற்பாடே இதுவாகும். இலங்கைக்குத் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் நிலை மிகவும் குறுகிய காலத்துக்குள் மற்றுமொரு அபிவிருத்தியடைந்துவரும் நாட்டுக்கு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கை தொடர்பான நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலைத்தேய மேல்த்தர மற்றும் நடுத்தர வகுப்பினர் மாத்திரம் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரித்தானிய ஊடகவியலாளர், பிரித்தானிய அரசியல்வாதி, கனேடிய மற்றும் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என சில தெரிவுசெய்யப்பட்ட தரப்பினர் மாத்திரம் கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகத்தின் இந்தத் தலையீடானது போருக்குப் பின்னரான இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானங்களுக்கு ஆபத்தானது என்பது தெளிவாகியுள்ளது. வெளிநாட்டு ஊடகத்தின் இந்த ஊடகப் பிரசாரமானது எல்.ரி.ரி.ஈ.யினரின் தீவிரவாத அரசியல் சக்திக்கு புத்தூக்கம் அளிக்கும் வகையில் அமைந் துள்ளது. இது இலங்கைக்குள் இறுதித்தீர்வு முன்வைக்கப்படுவதை ஒத்திவைத்துவிடும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேர வையை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு எதிரான இக்குற்றச்சாட்டுக்கள் நன்கு பயிற்சி பெற்று, செம்மையாக்கப் பட்டே தயாரிக்கப்பட்டுள்ளது. சனல்-4 தொலைக்காட்சியின் பிரதான இலக்கு ஊடகவியலைவிட அரசியல் ரீதியானது என்பது இதன்மூலம் தெளிவாகப் புலனாகிறது.
சனல்-4 தொலைக்காட்சியின் இந்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டதன் காரணத்தை இலங்கை தொடர்பான நிகழ்ச்சியின் பணிப்பாளர் கலம் மக்ரே, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தெளிவாகக் கூறியிருந்தார். அரசாங்கத்துக்கு எதிரான குழுக்களிட மிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டே சனல்-4 தொலைக்காட்சி பரபரப்பான இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத, முகம்கள் மறைக்கப்பட்டவர்களே சாட்சியங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப் புப் படையினர் தொடர்பில் கவனம் செலுத் தியிருக்கும் சனல்-4 தொலைக்காட்சி தனது வீடியோ காட்சிகளில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சர் என விபரித்துப் பாரியதொரு அடிப்படையான பிழையொன்றைப் புரிந்துள்ளது. இந்த வீடியோ காட்சியில் எல்.ரி.ரி.ஈ.யினர் பயங்கரவாத அமைப்பு என்பது ஒரு இடத் திலும் குறிப்பிடப்படவில்லை.
தாம் உயிர்வாழ்வதற்காகத் தம்முடன் இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுக்களை எல்.ரி.ரி.ஈ.யினர் படுகொலை செய்த சம்பவங்கள் குறித்து இதில் சனல்-4 தொலைக்காட்சியின் வீடியோவில் கவனம் செலுத்தப்படவில்லை. பாதுகாப்பு வலயங்கள் மீதும் அங்கு அமைக்கப்பட்டிருந்த வைத்திய சாலைகள் மீதும் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் ஆட்லறி பிரி வினர் நடத்திய மோட்டார்த் தாக்குதல்கள் குறித்து இந்த வீடியோ காட்சிகளில் எதுவும் காண்பிக்கப்படவில்லை.
பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவ கார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்த கருத்துக்களானவை பிரித்தானியாவி லுள்ள தமிழர்களின் வாக்குகளை மாத்திரம் இலக்குவைத்துத் தெரிவித்த கருத்துக்கள் என்பதும் இந்த வீடியோ காட்சி மூலம் புலனாகியுள்ளது.
இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்து வதற்கும், நற்பெயரை களங்கமடையச் செய்வதற்காகவும் மாத்திரமே இந்த வீடியோ காட்சி சனல்-4 தொலைக்காட்சி யால் ஒளிபரப்பப்பட்டுள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் ஊடகவியல் கொள்கை களுக்கு முறனான முறையில் இந்த வீடியோ காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது என்ற ஒரேயொரு நோக்கில் மாத்திரமே இந்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment