யாழ்ப்பாணத்தில் மாடு வெட்டும் விவகாரம் - முஸ்லிம் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார் - பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் சகோதரர் ஒருவர் இறைச்சிக்காக வெட்டவிருந்த மாட்டை தடுத்தி நிறுத்தியமைக்கு உரிய காரணம் சமர்ப்பிக்குமாறு யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கும், யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் திகதி மாட்டினை வெட்டுவதற்கு முஸ்லிம் சகோதரர் ஒருவர் ஏற்பாடுகளை செய்திருந்தார். இருந்தபோதும் இவ்விடயத்தை தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்தியதையடுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலையிட்டு மூலம் மாட்டினை வெட்டுவதற்கு தடை விதித்தார்.
இதனையடுத்து மாட்டினைக் கொள்வனவு செய்தவர் யாழ். நீதிமன்றத்தில் மாட்டினை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதைதொடர்ந்தே நீதிமன்றத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. காரணத்தை 30 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். நீதிவான் மா.கணேசராசா பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளர்

Post a Comment