உலகிலேயே லண்டன் மிகமோசமான நகரம் - அமெரிக்கா பத்திரிகை சொல்கிறது
வன்முறையும், பகைமையும், மிருகத்தனமும், கொடூரமும் நிறைந்த நகரம் லண்ன் என்று பிரபல அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. நகரத்தை குறித்த ‘ஓ லண்டன் யூ ட்ராமா க்யூன்’ என்ற தலைப்பிலான சிறப்பு கட்டுரையில் நகரத்தின் கொடூரமான முகம் விமர்சிக்கப்படுகிறது.
லண்டனில் போலீஸ் மக்களுடன் மிருகத்தனமாக நடந்துகொள்கிறது. நீதிமன்றங்கள் மிகவும் கொடூரமாக நடந்துகொள்கின்றன. முதியவர்கள் இளையவர்களிடம் எப்பொழுதும் வெறுப்பை உமிழ்கிறார்கள். மக்களிடையே கடுமையான இனவெறி நிலவுகிறது-பிரிட்டீஷ் தலைநகரை குறித்து இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது நியூயார்க் டைம்ஸ். எழுத்தாளர் சீன மீவில்லா என்பவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
ஒலிக்பிக்ஸ் போட்டிகளை நடத்த தயாராகும் லண்டனில் போட்டிகள் பாதுகாப்பு திருவிழாவாக மாறும் என்று கட்டுரை எச்சரிக்கை விடுக்கிறது. தீவிரவாதத்தைக் குறித்து அதீத பயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானை விட அதிகமான ராணுவ வீரர்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கட்டுரை கூறுகிறது.
Post a Comment