Header Ads



ஜெனீவாவில் அமெரிக்காவுக்கு எதிராக பிரேணை - கறுப்பின மக்களுக்கு எதிராக செயற்படுகிறதாம்



அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21 மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக்கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25 சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் NAACP அமைப்பு இதுபற்றிய முறைப்பாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல் சட்டங்கள் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களின் சிவில் மற்றும் மனித உரிமைகளை அடக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென்று அந்நாட்டின் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வரும் தேசிய அமைப்பு (NAACP) ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன் கிழமையன்று முறைப்பாடொன்றை தாக்கல் செய்ய உள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை பொதுவாக லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து வரு வதுண்டு. 1940ம், 50ம்தசாப்தங்களில் ஆரம்பிக்கப்பட்ட NAACP அமைப்பு அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் சிவில் உரிமை போரா ட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தா பனத்தினதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தினதும் ஆதரவை தந்து உதவுமாறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றன.

இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிதுபடுத்தி ஆய்வுகளை நடத்தி வரும் அமெரிக்கா தனது நாட்டில் உள்ள கறுப்பின மக்களை இவ்விதம் துன்பப்படுத்துகிறது. அமெரிக்காவில் கடந்து ஆண்டு முதல் 15 மாநிலங்களில் இந்த புதிய தேர்தல் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி ஒருவர் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அடையாளப் புகைப்படம் கையிருப்பில் இருந்தால் மட்டுமே அவர் அமெரிக்க பிரஜை என்பதை நிரூபித்து தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்படுகிறது. இதனால் உண்மையிலேயே அந்நாட்டின் பிரஜாவுரிமையுடைய கறுப்பு இன மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள். இது அமெரிக்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் என னிதிதிவிஜி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

இந்த புதிய தேர்தல் சட்டங்கள் மறைமுகமாக கறுப்பு இன மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு எடுக்கப்படும் சதி முயற்சி என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இத்தகைய அடக்கு முறைகளுக்கு எதிராக தென்கரோலினா ஆட்சேபம் தெரிவித்து அமெரிக்காவின் மனித உரிமைகள் திணைக்களம் கடந்த மாதம் அந்நாட்டின் நீதி திணைக்களத்திற்கு எதிராக வழக்கொன்றையும் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசாங்கம் தனது நாட்டில் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி அந்தளவிற்கு அக்கறை காட்டாமல், தமது நாட்டுப் பிரஜைகளின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிதுபடுத்தி, துன்புறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இந்த ஆட்சேபனை குறித்து கருத்து தெரிவித்த சட்டவல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அமெரிக்கா முதலில் தனது நாட்டில் உள்ள மக்களின் மனித உரிமை மீறல்களுக்கு உத்தரவாதம் அளித்த பின்னர் மற்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது நல்லதென்று கூறினார். 

அமெரிக்காவில் உள்ள 21 மில்லியன் கறுப்பின மக்களிடம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள புகைப்படம் இல்லாதிருக்கிறது. அது மட்டுமன்றி அமெரிக்க சனத்தொகையில் 25 சதவீதமானோருக்கும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள புகைப்படம் இல்லாதிருக்கிறது. அடையாள புகைப்படம் இல்லாத பிரதேசங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கறுப்பின மக்களாவர். அமெரிக்காவின் இந்த புதிய தேர்தல் சட்டம் அமெரிக்க கறுப்பின மக்களின் வாக்குரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது. இதைப்பற்றி அமெரிக்க அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.