லிபியாவில் எழுச்சிபெறும் இஹ்வானுல் முஸ்லிம்கள்
லிபியாவில் முஸ்லிம் சகோதரத் துவ அமைப்பு தனது அரசியல் கட்சியை அமைத்துள்ளது. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்ற அரசியல் கட்சியை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
திரிபோலியில் நடந்த கூட்டத் திற்கு பின் நாட்டின் 18 நகரங்களின் 1,400 அங்கத்த வர்களைக்கொண்டு புதிய அரசியல் கட்சி அமைக்கப் பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மொஹமட் ஜைர் குறிப்பிட்டார். இதில் முஅம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் 8 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்த மொஹமட் சவான் மேற்படி கட்சியின் தலை வராக தேர்வாகியுள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 1949 ஆம் ஆண்டு தொடக்கம் லிபியாவில் செயற்பட்டு வருகிறது. எனினும் கொல்லப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் அந்த அமைப்பு கடுமையாக எடுக்கப்பட்டதோடு அதன் முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் லிபியாவில் அது முன்னணி அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
அத்துடன் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னரான தேர்தல்களில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புடைய கட்சிகளே வெற்றியீட்டியது.
Post a Comment