Header Ads



பரீட்சை தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மாணவர்களுக்கு வேண்டும் - பொலிஸார் புத்திமதி

ஓ.எல். பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ள நிலையில், பரீட்சை முடிவுகள் திருப்த்தியளிக்காத நிலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதுபோன்று இன்று செவ்வாய்கிழமையும் பரீட்சை முடிவுகள் திருப்த்திதராத களுத்துறையைச் சேர்ந்த 17 வயதான மாணவியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவரின் குடும்பத்தினரால் காப்பற்றப்பட்டு நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இது தொடர்பாக கூறுகையில், 'பெரும்பாலானோர் பல தடவை முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். பெரிய பரீட்சைகளில் சித்தியடைவதற்கு அனைவருக்கும் அதிஷ்டம் கிடைப்பதில்லை' என்றார்.

பிள்ளைகளின் திறமைகளை பெற்றோர்கள் இனம்கண்டு அத்திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
 

No comments

Powered by Blogger.