Header Ads



யாழ்ப்பாணத்தில் இப்படியம் ஒரு சாதனை

யாழ். மாவட்டத்தில் தினமும் சுமார் 50 ஆயிரம் இறாத்தல் பாண் மக்களால் நுகரப்படுவதாகத் தெரியவருகிறது. மாவட்டத்திலுள்ள பேக்கரிச் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரத் தரவுகள் மூலமே இது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகைப் பதிவுகளின் பிரகாரம் 6 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களாலேயே இந்த 50 ஆயிரம் இறாத்தல் பாண் நுகரப்படுகிறது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இப்போது பாணின் நுகர்வில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது. அதுமட்டுமன்றி கடந்த பெப்ரவரி மாதம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அதன் விற்பனையில் சுமார் ஆயிரம் இறாத்தல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

யாழ். மாவட்டத்தில் பேக்கரி உரிமையாளர் சங்கம், பேக்கரி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் கீழ் சுமார் 65 பேக்கரிகள் பதிவில் உள்ளன. இந்த இரண்டு சங்கங்களின் கீழே பதிவில்லாத பேக்கரிகளும் இயங்கி வருகின்றன. இவை அனைத்தில் இருந்தும் உற்பத்தியாகும் பாணே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால் நடைகளுக்கான தவிடு, பிண்ணாக்கு போன்ற கால்நடைத் தீவனங்களுக்குத் தட்டுப்பாடு நிலவிய கடந்த காலத்தில் கால் நடைகளின் தேவைகளுக்கும் பாண் நுகரப்பட்டு வந்தது. அதன் காரணமாக பாணின் நுகர்வு அதிகரித்திருந்தது.

ஆனால் தற்போது கால்நடைத் தீவனங்கள் தாராளமாகக் கிடைக்கப் பெறுவதாலும் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதாலும் அதன் நுகர்வில் வீழ்ச்சி காணப்படுகிறது.       

No comments

Powered by Blogger.