Header Ads



உடல் எடையை குறைய போராடுபவரா நீங்கள்..? இதனையும் வாசியுங்கள்..!

உலகம் முழுவதும் இப்போது உடல் பருமன் என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, உடல் பருமனைக் குறைக்கும் உணவுப் பொருட்கள் புதிது புதிதாக அறிமுகமாகி வருகின்றன. ஆனால் இவை உண்மையிலேயே பருமனை குறைக்கிறதா என்றால், இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

அமெரிக்காவில் ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி துறை பேராசிரியர் மெலிண்டா மனோர் தலைமையில் ஒரு குழுவினர் இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன் முடிவு பற்றி மெலிண்டா கூறியதாவது: உடல் பருமனைக் குறைப்பதாக கூறப்படும் உணவுப் பொருட்கள் எதுவும் உண்மையிலேயே பருமனை குறைத்ததற்கான ஆதாரம் இல்லை. மாறாக, சில உணவுப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

உடல் பருமன் அதிகரிப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட மோசமான விளைவுகளையும் உண்டாக்குகின்றன. கிரீன் டீ, நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்புள்ள பால் பொருட்கள் உள்ளிட்ட சில வகை உணவுகள் ஓரளவு பருமனைக் குறைக்க உதவுகின்றன. உணவு பழக்கவழக்கத்தை மாற்றிக் கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவதுதான் பருமனைக் குறைக்க உதவும். வேறு புதிய பொருட் களை பயன்படுத்துவது உடல்நலனுக்கு நல்லதல்ல.

உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். அதேநேரம் இறைச்சி, அதிக கலோரி மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். இவற்றுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது மிக அவசியம். இவ்வாறு மெலிண்டா கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.