Header Ads



இத்தாலியில் இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - மஹிந்தவிற்கு ஆதரவாகவும் கோஷம்


இலங்கைக்கு எதிரான சர்வதேச சதித் திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதுடன் இலங்கைக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டிவரும் சர்வதேச சக்திகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

இலங்கையில் இன, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களை காவுகொண்டு ஆயிரக்கணக் கானோரை அங்கவீனர்களாகவும் மாற்றிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி நாட்டிலே நிரந்தர சமாதானத்தை யும் அமைதியான சூழ்நிலையினையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சிறந்த வழிகாட்டல் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு அவர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2010 ஆம் ஆண்டிலே நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% வீதமாகக் விருத்தி கண்டுள்ளதாகவும், நாட்டிலே பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைப்பதற்காக விமான நிலையங்கள் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றினை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் பூரண ஆதரவினைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

எமது தாய் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்கள், சூழ்ச்சிகள் என்பவற்றிற்கு எதிராக நாம் உலகின் எங்கிருந்தாலும் அணிதிரண்டு தாய் நாட்டை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாகக் கூறும் அவர்கள் எதிர்வரும் நாட்களில் இத்தாலியின் மிலானோ, பிரெஞ்சி, நாபொலி, கட்டானியா, வெரொனா ஆகிய நகரங்களிலும் பாரிஸ் நகரிலும் மற்றும் லண்டன் நகரிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் இலங்கை ஒன்றிய ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.