Header Ads



இலங்கைக்கு வியட்னாமிலிருந்து எரிபொருள் வருகிறது

மானிய விலை அடிப்படையில் வியட்னாமிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வியட்னாம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்கீழ்  ஆறு மாதங்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஓமானில் இருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.