Header Ads



ஊடகங்கள் தமது விற்பனையை அதிகரிப்பதற்காக எனது பெயரை பயன்படுத்துகின்றன - அமைச்சர் மேர்வின் சில்வா வேதனை

விற்பனையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஊடகங்கள் தமது பெயரைப் பயன்படுத்திக்கொள்வதாக பொதுமக்கள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரையில் தமக்கு இவ்வாறான தகவல் எதுவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மைப் பற்றிய வதந்திகளைப் பரப்பி ஊடகங்களின் விற்பனையை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கைப் பூர்வீகமாகக் கொண்டவன் என்ற ரீதியில் நாட்டைக் காட்டிப் கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எதிராக செயற்படுவோரின் கை, கால்களை உடைப்பதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை மிகவும் குறைவானது எனவும், பண்டைய மன்னர் ஆட்சிகளில் தேசத் துரோகிகளுக்கு கடுயைமான தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

களனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் டொலர்களுக்காக நாட்டைக் கொடுத்து சிங்களவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எவரையும் மன்னிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments

Powered by Blogger.