மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் உயிர் தப்பினார் ஒபாமாவின் மகள்
மெக்ஸிக்கோவின் பசுபிக் கரையோரப் பகுதியான அகாபுல்கோவுக் கருகிலே கடுமையான நிலநடுக்கமொன்று தாக்கியுள்ளது. குஏரெரோ பிராந்தியத்தில் ஒபிரிபேக் கிழக்கில் 15 மைல் (25 கிலோ மீற்றர்) ஆழத்தில் 7.4 மக்னிரியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியங் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குஏரெரோ பிரந்தியத்தில் 500 இற்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். அடுத்தடுத்து ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் இரண்டாவது நிலநடுக்கம் 5.8 மக்னிரியூட் அலகு பதிவாகியுள்ள அதேவேளை 24 மணித்தியாலங்களில் மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு உடமை சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்தேசம் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மெக்ஸிகோவின் தென்மேற்கு நகரான ஒசாகாவுக்கு பாடசாலை சுற்றுலாவொன்றினை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதியின் மகள் மரியா ஒபாமா (வயது 13) நிலநடுக்க அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அலுவலகம் தெரிவித்துள்ளது
Post a Comment