Header Ads



அமெரிக்கா ஒழியட்டும்' 'ஒபாமா ஒழியட்டும்' - ஆக்கிரமிப்பாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற புனிதப் போரை தவிர வேறு வழிகள் இல்லை



அமெரிக்க ராணுவ வீரன் நடத்திய கூட்டுப் படுகொலையைத் தொடர்ந்து ஆப்கானில் அமெரிக்க எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. ‘அமெரிக்கா ஒழியட்டும்’ ‘ஒபாமா ஒழியட்டும்’ உள்ளிட்ட முழக்கங்களை முழங்கியவாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று ஜலாலாபாத்தில் போராட்டம் நடத்தினர்.

ஒபாமாவின் உருவத்தை கொளுத்திய போராட்டக்காரர்கள் காபூல் செல்லு சாலையை பல மணிநேரங்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற புனிதப் போரை தவிர வேறு வழிகள் இல்லை என்று எழுதிய பேனர்களை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

அதனிடையே, கூட்டுப்படுகொலை நிகழ்ந்த பஞ்சவால் கிராமத்திற்கு பார்வையிட வந்த அரசு பிரதிநிதிக் குழுக்கள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராணுவ வீரன் கொல்லப்பட்டார். மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிபர் ஹமீத் கர்ஸாய், இரண்டு சகோதரர்கள்,மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments

Powered by Blogger.