பொலனறுவை வெலிக்கந்தையில் முஸ்லிம்களிடையே மோதல் - 7 பேர் காயம், 12 வாகனங்கள் சேதம்

முஸ்லிம் பள்ளிவாசலில் நிகழ்வொன்றுக்காக கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சென்றவர்களுக்கும், பொலன்னறுவை, வெலிக்கந்த கடுவன்வில கிராம வாசிகளுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் 12 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலுக்கு பள்ளிவாசல் இரண்டுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துமுரண்பாடு முற்றியமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் சிகிச்சை பெற்று வெளியுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவத்தில் பேருந்து ஒன்று, 6 சிற்றூர்ந்துகள், கெப் வாகனம் ஒன்று, 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் ஈருருளியொன்று உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இருந்தபோதும், பிரதேசத்தின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

What was realy happenned?
ReplyDeleteNeed more details.