இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியது அமெரிக்கா
இலங்கைக்கு பாதுகாப்பு தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்ததுள்ளது
சிறிய ரக வானூர்திகள், கமெராக்கள் மற்றும் அவற்றுக்கான பாகங்கள் போன்றவற்றுக்கு தனித்தனியாக தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வியாழக்கிழமையிலிருந்து அமுலாக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த தடை தளர்த்தப்பட்டதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.

What does America plan?
ReplyDeleteAnswer is here.
http://www.jaffnamuslim.com/2012/03/blog-post_9846.html