Header Ads



காதலுக்காக இஸ்லாத்தை ஏற்று, இஸ்லாத்திற்காக காதலையும், குடுபத்தையும் இழந்த சகோதரன்!

CMF

ஒரு சில நாட்களுக்கு முன் அப்ஸல் கான் என்ற சகோதரர் உடன் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு சில நிமிடம் கழித்து அப்ஸல் கான் என்னிடம் அவர் நண்பரை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு சில மாதகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர் அப்துர் ரஹ்மான் என்று அவரிடம் என்னை பேச சொன்னார்.
 
நன் அவர் இடம் பேச தொடங்கி, அவரை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன். கேட்டு அறிந்த உடன் என் உள்ளம் அழவேண்டும் என்று சொன்னது!

அல்லாஹு அக்பர்!

அப்துர் ரஹ்மான் உண்மை பெயர் ராஜ் குமார் கோவையை சேர்ந்த இவர் தற்பொழுது BE Mechanical Final year படித்து கொண்டு உள்ளார்.

இவர் ஒரு முஸ்லிம் பெண் மீது கொண்ட காதல் அவரை இஸ்லாத்தினுள் கொண்டு வர செய்தது.

அந்த இஸ்லாமிய பெண் அப்துர் ரஹ்மானுக்கு ''தாவாஹ்'' செய்து உள்ளார்.

அந்த பெண்ணுக்காக இஸ்லாத்தை எற்று கொண்ட அவர்! இஸ்லாத்தின் மீது காதல் திரும்பியது! முழுமையான இஸ்லாத்தை நோக்கி நடக்க முயற்சி செய்தார்.

அவர் விட்டில் அவர் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு ''தாவாஹ்'' செய்து உள்ளார். அவருடைய தாவாஹ்வை ஏற்க மறுத்த அவருடைய குடுபத்தினர், அவருடைய அண்ணனுக்கு பெண் பார்ப்பதாகவும், அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றது அறிந்தால் அவர் அண்ணனுக்கு பெண் கொடுக்கமாட்டார்கள் என்று அவரை கல்யாணம் முடியும் வரை வீட்டிக்கு வர வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து உள்ளார்கள். அவருக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள பெயர் "பைத்தியம்!"

குடும்பம் தான் அவரை ஒதுக்கியது என்றால், அவர் காதலித்த அந்த பெண் விட்டார் அவருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க தயராக இல்லை. காரணம் புதியதாக இஸ்லாத்தை ஏற்றவர்! அந்த பெண் Strong ஆக இருந்ததால் அவரை House Arrest யில் வைத்து உள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் அந்த பெண் விட்டார் இடம் சொன்னதாக சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது

"நீங்கள் வேண்டுமானால் உங்கள் மகளை எனக்கு மனம் முடித்து கொடுக்க முன்வராமல் இருக்கலாம், ஆனால் உங்கள் மகளால் கிடைத்த இந்த இஸ்லாம் எனக்கு நிலையானது" என்று.

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

அல்லாஹ்வுக்காகவும், அவன் தூதருக்காகவும், அவர்கள் மீதுள்ள அன்பிற்காகவும், தூய இஸ்லாத்தை ஏற்று; ஒருபுறம் உறவினர்களை இழந்து மறுபுறம் காதலை இழந்து தவிக்கும் அவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருதேன்.

அப்பொழுது என் உள்ளத்தில் உதித்த விஷயங்களை அவரிடம் சொனேன்; ''துவா மற்றும் சதகா(தர்மம்) தலை விதியை மற்றும் என்றும்! உங்கள் குடுபத்திற்காகவும் அந்த பெண்ணுகவும் அதிகமா துவா செய்யுகள்'' என்று!

மேலும் பின்வரும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அவரிடம் சொன்னேன்.

"எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான் (குர்ஆன் 65:2-3)

ஈமானுக்கு கொடுக்கபடும் சோதனைகள் இவை! நிச்சயம் அல்லாஹ் அவருக்கு இரு உலகிலும் உயர் பதவிகளை கொடுப்பான் இன்ஷா அல்லாஹ்!

இந்த ஒரு சகோதரன் மட்டும் அல்ல இதைபோல் இன்னும் எத்தனயோ சகதர சகோதரிகள் தனக்கு வரும் சோதனைகளை அல்லாஹ்வுக்காக சகித்து கொள்கிறார்கள்! நிரந்தரமான மறுமையின் சந்தோஷத்திற்காக!

அப்துர் ரஹ்மானுக்காக அவருடைய அனைத்து சூழ்நிலைகளை சரியாக்கி இரு உலகிலும் நிம்மதியான, சந்தோஷமான வாழ்கை கிடைக்க வேண்டி உங்களோடு சேர்த்து நானும் துவா செய்வோம் என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை செய்கிறேன்

அன்புடன் ,

CMF

No comments

Powered by Blogger.