Header Ads



ஜெனீவா பிரச்சினையை அரசாங்கம் வியாபார பொருளாக கையாளுகிறது - ஐ.தே.க. குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக மகிந்த அரசாங்கம் ஜெனிவா பிரச்சினையை வியாபாரப் பொருளாக கையாண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அரசாங்கத்தின் பிழையான நடத்தைகளின் காரணமாகவே இலங்கைக்கு எதிரான பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பிரேரணை நாட்டுக்கு எதிரானதல்ல. ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்குத்தான் எதிரானது. இந்தியா தமிழ் மக்களின் சுயமரியாதை மற்றும் மறுவாழ்விற்காக அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முடிவை வரவேற்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றினைத்து  ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் நடத்துகிறது. இந்த இரட்டை வேடம் எதற்காக? தற்போது நாட்டில் தோன்றியுள்ள பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றது
 
இவ்வாறு மக்களை ஏமாற்றும் போலி நடவடிக்கைகளை கைவிட்டு எஞ்சியிருக்கும் நாட்களிலாவது மேற்குலக நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமூகமான தீர்வை எட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் ஜெனீவாவில் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அயல் நாடான இந்தியா உதவும் என அரசு திடமாக நம்பியிருந்தார்கள். அதுவும் இன்று வெறும் கானல் நீராக மாறிவிட்டது. இங்கிருந்து பல இலட்சம் ரூபாக்களைச் செலவழித்து 52 பிரதிநிதிகளை ஜெனீவாவிற்கு அனுப்பியும் ஆனால் தற்போது எதுவிதமான பிரயோசனமும் இல்லாது போய்விட்டது.

தற்போது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கூறுகிறார்கள் ஆனால் அமெரிக்காவின் பிரஜவுரிமையினைப் பெற்றுள்ள அமைச்சர்களும் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.