Header Ads



ஈரான், அல்ஹைதா என்று கத்திய விமான கெப்டன் கைது - அமெரிக்காவில் பரபரப்பு

கேப்டனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

நியூயார்க்கில் இருந்து லாஸ்வேகாஸ் சென்று கொண்டிருந்த ஜெட்ப்ளூ-191 விமானத்தின் கேப்டன் காக்பிட்டில் இருந்து வெளியேவந்து வெடிக்குண்டு, ஈரான், அல்காயிதா மிரட்டல் என  கத்த துவங்கினார். பின்னர் காக்பிட்டில் நுழைய முயன்ற அவரை பயணிகள் பிடித்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விமானாம் டெக்ஸாசில் அமரில்லோ விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது. 135 பயணிகள் இவ்விமானத்தில் பயணித்தனர்.

பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. போலீசாரும், எஃப்.பி.ஐயும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

1 comment:

  1. கத்தியவர் முஸ்லிமாக இருந்தால், குவாண்டனாமோவில் விசாரணையின்றி நீண்ட கால சிறை.

    கத்தியவர் முஸ்லிமல்லாதவராக இருந்தால், மனநோயாளி என்று அவர்களின் ஊடகங்களே தீர்ப்பு அளிக்கும்.


    - namo namo maatha

    ReplyDelete

Powered by Blogger.