Header Ads



பேரினவாதிகளின் பிடியில் அஷ்ரப் நகரம்..! மக்களின் உள்ளக் குமுறல்கள்..!! (படங்கள்)

எஸ். எல். மன்சூர்

இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலத்திலிருந்து மூவினத்திற்குள்ளும் பல்வேறு குழிபறிப்புக்களும், கழுத்தறுப்புக்களும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் சந்தேகத்துடன் பார்ப்பதும் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளன. நாட்டின் நற்பிரஜைகளைத் தோற்றுவிக்கப் புறப்பட்ட கல்வித் திட்டங்களும்சரி, பல்கோண அரசியல் யாப்புக்களும்சரி, ஆணைக்குழுக்களும்சரி வெறுமனே கண்துடைப்புக்குத்தான் என்கிற நிலையிலிருந்து இன்றுவரையும் மாற்றம் பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருப்பதை கடந்த 65 ஆண்டுகளாகவே நாம் பார்க்கின்றோம்.

ஒரேநாடு, ஒரே மொழி, இருநாடு இருமொழி என்றெல்லாம் அரசியல் ஞானம் பெற்றவர்கள் இனங்களுக்குள் பிளவுகளையும், பித்தலாட்டங்களையும் அவிழ்த்துவிட்டனர். இறுதியில் தன்னுடைய உயிரையே பாதுகாக்க முடியாத எத்தனையோ தலைவர்கள் மேடைகளிலும், வீதிகளிலும் முண்டங்களாக வெடிகுண்டுகளுக்குள் இரையாக்கப்பட்டு உயிரை மாய்த்த வரலாறுகள் நமக்குக் கற்றுத்தந்த படிப்பினைதான் என்ன? இந்நாட்டு மக்களும் தங்களது நாடு, தான் பிறந்தநாடு, தனது சொந்த நாடு என்கிற வரையறுக்குள் தானுண்டு தன் தொழில் உண்டு என்கிற, சகோதரத்துவ வாஞ்சையுடன் உலாவந்த காலத்தை இயக்கங்கள் என்ற பேரில் பேரினவாதத்திற்கு எதிரான கிளர்ச்சியாகவும், தனிநாட்டுக்கான கோரிக்கையாகவும் முன்னிருத்தி நடாத்திய போராட்டத்தின் விளைவு இன்று ஜெனீவா வரையிலும் தொக்கி நிற்கின்ற ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் நமக்குளே வாய்கிழிய பேசப்படும் ஒற்றுமை எங்கே, நீதி நியாம் எங்கே?


இவற்றையெல்லாம் இப்போது ஏன் ஞாபகப்படுத்துகின்றோம் என்றால் கடந்தகால யுத்தமேகங்கள் நாட்டிற்குள் இருந்த போது சற்றுக் குறைவடைந்திருந்த நாடுபிடிக்கும் படலம் அதாவது நாட்டை அப்படியே கபளீகரம் செய்கின்ற, பேரினவாதத்தை நாடுமுழுக்க விதைக்கின்ற ஒரு செயற்பாட்டை வௌ;வேறு பெயர்களில் இன்று முஸ்லீம் பிரதேசம்சரி, தமிழ்பேசும் பிரதேசம்சரி எங்கும், எதிலும் சாயம்பூசப்பட்டு மற்ற இனத்தின் முதுகில் காலம் தள்ளுகின்ற ஒருநிலைமைக்கு நாடு சென்றுகொண்டிருக்கின்ற ஒருவிடயம் அண்மைக்காலமாக அரகேற்றப்பட்டுக் கொண்டுவருவதிலிருந்து நமக்குள் மீண்டும் பிரிவினைகளும், ஒற்றுமைச் சீர்குலைவுகளும், சந்தேகப்பார்வைகளும் வெளிக்காட்டப்பட்டு வருகின்றன என்பதுதான் யதார்த்தமான உண்மைகளாகும். இந்த விடயம் குறிப்பாக பல்வேறு மட்டங்களில் இயக்கப்பட்டுக் கொண்டு வந்தாலும் இதனை தட்டிக் கேட்பதற்கோ, யதார்த்தத்தை பேசுவதற்கோ நமது தலைமைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்கிற கேள்விகளும் எழாமலில்லை.

தென்கிழக்கின் தலைநகரம் என்று ஒருகாலத்தில் முன்னாள் அமைச்சர் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களால் பேசப்பட்ட ஒலுவில் பிரதேசம் பல்வேறு வளங்களை கொண்டுள்ள பிரதேசமாகும். துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், தும்புத் தொழிற்சாலை, விவசாய பெருநிலப்பரப்புக்கள், கழியோடை ஆறு போன்ற வளமிக்க இப்பிரதேசத்தின் ஒரு எல்லையாக தீகவாபி எனும் புனிதப் பிரதேசமும் காணப்படுகின்றது.

இப்பிரதேசம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குள் இருந்தாலும் அண்மைக்காலத்திலிருந்து தீகவாபி பிரதேசத்தை ஒலுவிலுடன் சேர்த்து தனிமையான பிரதேச செயலகமாக மாற்றம் பெறுவதற்கான கதைகளும் பேசப்பட்டுக் வருகின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது காலத்திலிருந்து பொன்னம்வெளி, ஆள்சுட்டான், பள்ளக்காடு, பால்கேணிவட்டை போன்ற வயல் பிரதேசங்கள் பேரின மக்களால் முடக்கப்பட்டு இப்பிராந்திய முஸ்லீம் மக்களின் நெற்செய்கைக்கான நிலங்கள் வேட்டு வைக்கப்பட்டபோது அதனை மீட்டிட நீதிமன்றத்தை நாடியும் கிடைக்காத உரிமைச்சொத்து என்றுதட்டிக்கழித்து முக்காடிட்ட வரலாறுகள் இப்பிராந்திய விவசாயிகளின் மனநிலையில் மாறாத வடுக்கள் இன்னும் மாறாத நிலையில் மீண்டும்; மக்கள் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரப்  பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றுகின்ற ஒருபடலம் தற்போது ஆரம்பித்து மாதங்கள் பல கடந்துள்ள நிலையில் அந்த மக்களின் உள்ளக்குமுறல்களை வெளிக்கொணர அரசியல்வாதிகளோ, முஸ்லீம் தலைமைத்துவங்களோ ஏதுமற்று மனது நொந்துபோன நிலையில் தங்களது உள்ளக்குமுறல்களை வெளிக்காட்டுகின்றனர் அஷ்ரப் நகரக் குடியேற்றக் கிராமத்து விவசாயிகள்.


கடந்த பல ஆண்டுகளாக விவசாயப் பயிர்ச்செய்கைக்குள் தங்களை ஈடுபடுத்தி வருகின்ற ஏழை விவசாயிகளின் காணிகளில் அத்துமீறிக் குடியிருப்பினை காவு கொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையைப் பற்றி கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் தொடர்புசாதனங்கள் வாயிலாக வெளிக்காட்டப்பட்டன. இதனைக் கண்டித்து எதிர்ப்பலைகள் டீடீஊவரை சென்றும் பலனேதுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவத்திடம் மக்களின் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அது நீரின்மேல் எழுத்துப்போல் ஆகிவி;டாது, நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தரும் என்கிற நம்பி;க்கைகளையும் இழந்துள்ள அஷ்ரப் நகரத்து மக்களின் இருப்புக்கே கேள்விக்குறியாகியுள்ள நிலைதான் இன்றைய யதார்த்தமாகும். ஏனெனில், முஸ்லீம் தலைமைகளும் ஓடோடிவந்து விடயங்களை கேட்டவர்கள் மீண்டும் அந்தப்பக்கமே எட்டிப்பார்க்காத நிலையில் குடியிருந்த மக்கள் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளமையானது இப்பிராந்தியம் மீண்டும் ஒருமுறை பேரினவாதிகளின் கைக்குள் அகப்பட்டு புனிதப் பிரதேசத்தின் விஸ்தரிப்புக்கான சமிக்ஞைகளாக இருக்கலாமோ? என மக்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் வெளியேற்;;;றப்பட்ட மக்கள். அவர்கள் கூறும் சோகக் கதைகளின் விபரம் இதேர்

'அரை நூற்றுக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்து வரும் எமக்குரிய இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களை அப்புறப்படுத்திவிட்டு முகாம் அமைப்பதற்கான தேவை அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை' என விவசாயி இப்றாலெவ்வை என்பவர் கூறுகின்றார். மேலும் அவர் கூறுவதாவது 'கடந்த நவம்பர் மாதம் 03ம் திகதி ஆமிக்காரர்களும், அவர்களுடன் வருகைதந்த வனபரிபாலன உத்தியோகத்தர்களும் நாங்கள் குடியிருந்த இடத்திற்கு வந்து நீங்கள் எவ்வித வேலைகளும் செய்ய வேண்டாம் இது மேலிடத்து உத்தரவு இந்த இடத்தில் பயிர்செய்யவும் கூடாது' என்று தடைவிதித்தனர். சில நாட்களின் பின்னர் தான்குடியிருந்த வீட்டை இராணுவத்தினர் உடைத்து சுக்குநூறாக்கி விட்டனர்.

தற்போது இருக்க இடமின்றி உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்கின்றோம். இது சம்பந்தமாக பலரிடமும் அறிவித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கைகளும் இன்றி தானும் தனது குடும்பத்தவர்களும் நிர்க்கதிக்குள்ளாகி வாழ்வதாக தெரிவிக்கின்றார். மேலும், இதன்காரணமாக தனக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்தாகவும், இதற்குரிய நஷ்டஈடும், நிலத்திற்;கான நிலமும் தரப்படவேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார் அந்த விவசாயி. காடாய்கிடந்த நிலத்தை வெட்டி குடியிருப்பு நிலமாக மாற்றியமைத்து பல ஆண்டுகள் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டமை தான் உளரீதியாவும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார் இப்றாலெவ்வை எனும் விவசாயி.


மேலும் இன்னொரு விவசாயியான மீராலெவ்வை கருத்துத் தெரிவிக்கையில் கடந்த 2011.11.10ஆந்திகதியன்று வயலை உழுது கொண்டிருக்கும் போது அங்கு வந்த இராணுவத்தினர் பயிர்கள் எதுவும் செய்யக்கூடாது என்கிற உத்தரவைப் பிறப்பித்து தடை செய்ததுடன், மக்கள் குடியிருக்கும் வீடுகளை விட்டு வெளியேறுமாறு பணித்து இராணுவத்தினரையும் காவலுக்கு வைத்தனர். தான் முப்;பதிரெண்டு ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றேன். என்னை வெளியேற்றுவதாக இருந்தால் மாற்றுக்காணியும் நஷ்டஈடும் தரும்படி வேண்டினேன். அவர்கள் எதனையும் கேட்காது எங்களை வெளியேற்றிவிட்டு இரவோடிரவாக குடியிருந்த வீட்டையும் இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டுவந்து ஒலுவிலில் உள்ள தனது மகளின் இல்லத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். தற்போது நானும் என் மனைவியும் இடமின்றி தவிப்பதாக கூறுகின்றார் அஷ்ரப் நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட 67வயதுடைய மீராலெவ்வை என்பவர்.

மேலும், கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்த தனது தந்தையின் மூலமாக கிடைத்த ஆலிம்சேனை என்று அழைக்கப்படும் அஷ்ரப் நகரத்தில் தனது குடும்பத்திற்கும் இன்னும் பல குடும்பங்களுக்கும் ஏற்பட்ட அவலநிலையை சொல்லில் வடிக்க முடியாது என்று தட்டுத் தடுமாறி அழுது புலம்புவதுடன், இந்த வயதான காலத்தில் இராணுவத்தினர் தன்னை வெளியேற்றிமை வாழ்;வின் சுமைகளில் மேலும் வலியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றார். இச்சம்பவம் பற்றி மேலும் விபரித்த மீராலெவ்வை 'கடந்த 2006ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் வனவிலங்கு அதிகாரிகள் வந்து குடியிருந்த வீட்டுக்கு தீ வைத்து, சுற்றிவர இருந்த பயிர்களையும் நாசம் செய்து வெளியேற்ற எடுத்த நடவடிக்கையில் மிகவும் கடுமையாகவே பாதிக்கப்பட்டேன். அதன் பின்னர் பிரதேச செயலாளர், கிராம சேவை அதிகாரி ஆகியோரின் முயற்சியினால் மீண்டும் காணிக்கான பத்திரத்தை பெற்றுக் கொண்டேன். ஆனால் தற்போது அப்பத்திரம் செல்லுபடியாகாது என்றும் தன்னை வெளியேற்றியே விட்டார்கள். காலாகாலம் செய்து வருகின்ற இந்த நிலத்தைவிட்டு வெளியேற்றி இப்பகுதி முழுவதும் பேரினவாதிகளை குடியேற்றும் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார் மீராலெவ்வை.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும் இன்றுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தனது மனக்குமுறலை வெளியிட்டு தனக்குள்ள ஆதாரங்களையும் காண்பி;க்கும் இவரைப் போன்ற விவசாயிகளின் வேதனையில் இப்பிராந்திய முஸ்லீம் அரசியல்வாதிகள் ஒன்றுமைப்பட்டு ஒன்றாய் குரல் கொடுப்பதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தனது தந்தையுடன் சிறிய வயதில் ஒலுவில் அஷ்ரப் நகரத்தில் குடியிருந்துவரும் குடும்பப்பெண் கதிசா உம்மா கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த 1990ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கிருந்து வெளியேறி அகதியாக வாழ்ந்துவிட்டு மீண்டும் சொந்த இடம் திரும்பிய எங்களையும் இராணுவ முகாம் அமைத்தல் என்கிற பேரில் குடியிருந்த வீட்டையும், இடத்தையும் கபளீகரம் செய்து வெளியேற்றிவிட்டார்கள். நான் உட்பட இன்னும் சில குடும்பத்தவர்களும் ஒலுவில் பிரதேசத்தில் கவலையுடன் அகதிவாழ்வு வாழ்வதாக கூறுகின்றார்; இப்பெண்மணி.

மேலும் இவ்விடயம் சம்பந்தமாக வனபரிபாலன பகுதியினருடன் ஏற்பட்ட இடத்திற்கான பிரச்சினை தற்போது நீதிமன்றிலும் உள்ள நிலையில் இராணுவ முகாம் எம்மைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ளமையினால் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்து தனது உள்ளத்து குமுறலை வெளியாக்கினார் கதிசா உம்மா. (வயது 42) எனும் பெண். அஷ்ரப் நகரத்துப் பிரச்சினை சம்பந்தமாக அங்கு வருகை தந்த அமைச்சர் றஊப் ஹக்கீம் 'முள்ளில் சேலைவிழுந்துவிட்டது மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும்' என்றும்,  'நீங்கள் யாரும் கவலைப்படவேண்டாம் பொறுமையாக இருங்கள் விரைவில் சரிவரும் என்கிற நம்பிக்கை ஊட்டிவிட்டுச் சென்றார். சென்றவர் சென்றவர்தான் இன்னும் வரவே இல்லை. நாள் போகப்போக இராணுவ முகாம் நிரந்த முகாமாக மாற்றம் பெற்று அங்கிருந்த குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும்சில குடியாளர்கள் தாம் எழுப்பப்போவதில்லை என்று அடம்பிடித்த நிலையில் இராணுவத்தினரின் எல்லைக்குள் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றார் கதிசா உம்மா என்கிற அஷ்ரப் நகரத்தில் வாழ்ந்து தற்போது ஒலுவிலில் வாழ்ந்து வரும் இப்பெண்.

இராணுவ அமைவிடத்திற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்ற நிலையில் நீண்டகாலமாக குடியிருந்த மக்களை எழுப்பிவிட்டு அதே இடத்தில் முகாம் அமைக்கப்படுவதானது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என எம். இஸ்மாயில் என்பவர் கூறுகின்றார். பாதுகாப்புத் தேவைதான் ஆனால் வனபரிபால உத்தியோகத்தர்கள் என்றபேரில் வருகை தந்து மக்களின் குடியிருப்புக்களை அழித்தமையானது இங்கு வாழ் ஏனைய மக்களுக்கும் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். அஷ்ரப் நகரத்தில் தேநீர்சாலை வைத்திருக்கும் ஐனுத்தீன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் உண்மையில் இப்பிரதேசத்தில் அமைதியான ஒரு சூழ்நிலை தோன்றம் பெற்றிருந்தது. தற்போது இராணுவத்தினர் அன்பாகப் பழகினாலும் சாதார பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்களை அப்புறப்படுத்தியமை கவலை அளிக்கின்றன எனவும் தெரிவித்தார். வறிய மக்கள் வாழும் இப்பகுதியில் தங்களது ஜீவனோபாயத்தை சேனைப் பயிர்கள் செய்வதிலும், விவசாயம் செய்வதிலும் காலம் தள்ளுகின்ற இம்மக்களின் வாழ்வில் விழுந்த பாரிய சுமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் வெறுமனே பேசமடந்தையாக இருப்பதுதான் தெரியவில்லை என்கிறார் எம்.எம்.  அசன் எனும் விவசாயி.


எனவே, கூட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்கள், சஞ்சலமுன்டாக்கும் சம்பவங்களின் நிமித்தம் வீடு வாசல்களிலிருந்து வெளியேறுகின்ற மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான நியாயத்தையும் வழங்க வேண்டும் என்கிற ருNழுவின் உள்நாட்டில் இடம்பெயர்வோர் தொடர்பான நெறிமுறை விதி 21இன்படி கேள்வி நியாயமின்றி எவருடைய சொத்துக்களையும், உடைமைகளையும் அபகரிக்கலாகாது. அவ்வாறானவர்களின் சொத்துக்களும் உடைமைகளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்படல் வேண்டும். குறிப்பாக அபகரித்தல், நேரடியான தாக்குதல்கள், ராணுவ நடவடிக்கைகளுக்கு கவசமாக உபயோகித்தல் போன்ற விதிமுறைகளின் பிரகாரம் இந்த மக்களின் குடியிருப்புக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே வேண்டி நிற்கின்றார்கள். நீண்டகாலம் வாழ்ந்த பூமி, அதற்கான தகுந்த ஆதாரங்கள் இருந்த போதிலும் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார்கள். யானை, பாம்பு போன்ற வன ஜந்துக்களினாலும் கடந்த காலங்களில் வன்செயல்களாலும் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டே வந்துள்ளார்கள்.

இக்குடியேற்றக் கிராமத்தின் எல்லையானது பெரும் காட்டுப்பிரதேசமாக காணப்படுதாலும், அதனைத் தொடர்ந்து புனித பூமியாகக் கருதப்படும் தீகவாபி பிரதேசம் அமைந்துள்ளதாலும் இப்பிராந்தியம் முழுவதும் எதிர்காலத்தில் பேரினத்தின்பிடியில் சிக்குண்டு போவதற்கான முன்னாயத்தங்களுக்கான சாத்தியங்கள் தென்படுகின்றன என்பதும் இங்குவாழ் மக்களின் ஐயப்பாடுகளாகும்.

ஏன் இந்தக் கொலைவெறி என்பதுபோல் ஏன் இந்த பிடிவாதத்தன்மை. ஒவ்வொரு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உந்துசக்தியாக விளங்குகின்ற முஸ்லீம் தமைப்பீடங்கள் காலத்திற்கேற்ற உத்தரவாதங்களை வழங்குவதுடன் நிற்காது, இந்நாட்டு முஸ்லீம்களின் இருப்புக்களையும் தக்கவைப்பதற்கான நியாயங்களின் அடிப்படையில் தமது உந்து சக்தியைப் பிரயோகித்து இந்நாட்டின் ஏனைய இரு பெரும்பான்மையின மக்களின் இணைப்புப் பாலமாக, சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்துவரும் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகளிலும், அபிவிருத்திகளிலும் முஸ்லீம் தலைமைகளும் சற்று பரந்த பார்வையச் செலுத்த வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்ப்பாகும். தேர்தல் காலங்களில் மாத்திரம் மேடைகளில்; வீராப்பு பேசிவிட்டு அடுத்த தேர்தலுக்கே வரும் அரசியல் செய்வோராக இராது மக்களினது வாழ்வில் அன்றாடம் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளிலும் ஆழ ஊடுறுவி அரசியல் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயப் பெருமக்களின் வேண்டுதலும், பிரார்தனையுமாகும்;.



No comments

Powered by Blogger.