அந்திர மாநிலத்தில் மன்னர் நிஜாமின் பாதாள அறை - தங்கப் புதையலும் உள்ளதாம்
ஆந்திர மாநிலம் ஐதராபாத் பிர்லாகுட்டா பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே தங்கப்புதையல் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து புதையல் இருப்பதாக கூறப்பட்ட இடத்தை தோண்ட அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தோண்டப்பட்டது. 20 அடி ஆழம் தோண்டிய போது நிஜாம் மன்னர் கால பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அந்த பாதாள அறையில் நிஜாம் மன்னர் கால தங்கப்புதையல் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதனால் அந்த பாதாள அறையை முழுமையாக தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே புதையல் ஆசையில் அப்பகுதி மக்கள் சிலர் கடபாரை கம்பியுடன் அங்கு வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
Post a Comment