பத்திரிகையாளரின் உடல்கள் பிரான்ஸ் வந்தன - சிரியா அனுதாபம் தெரிவிக்கிறது
அமெரிக்க ஊடகவியலாளர் மெரி கொல்வின் உயிரிழப்பிற்கு சிரிய அரசாங்கம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. ஹொம்ஸ் நகரில் வைத்து கடந்த வாரம் மாரி கொல்வின் கொல்லப்பட்ட நிலையில் சிரிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை லண்டனிலுள்ள சிரிய தூதரகம் ஊடாக வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய சண்டே டைம்ஸ் பத்திரிகைக்காக பணியாற்றிய பிரபல செய்தியாளர் மெரி கொல்வின் மற்றும் பிரான்ஸ் புகைப்படவியலாளர் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவை குழு மற்றும் சிரிய அரபு செம்பிறைச் சங்கம் ஆகியவற்றிடம் இருந்து குறித்த இருவரின் சடலங்கள் அதிகாரிகளிடம் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.
மெரி கொல்வின் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை கண்டறிய தமது நாட்டு அரசாங்கம் அதிக முயற்சி செய்யும் என சிரிய வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஊடகவியலாளரான மாரி கொல்வின் மற்றும் ரெமி ஒஸ்லிக் ஆகியோரின் சடலங்கள் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து பாரிஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment