Header Ads



யாழ்ப்பாணத்தில் பழைய இரும்பு ஏற்றுமதிக்கு தடை - முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு


எம்.எல்.லாபிர்

யாழ்ப்பாணத்திலிருந்து பழைய இரும்புகளை எடுத்துச் செல்வதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது. இத்தடை காரணமாக பழைய இரும்பு ஏற்றுமதியில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இரும்பு வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் பலாலி இராணுவ முகாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தகைளில் ஈடுபட்டபோதும் இதுவரை எத்தகைய தீர்வும் எட்டப்படவில்லை.

எனினும் காங்கேசன்துறை கிளிநொச்சி பகுதிகளிலிருந்து இரும்பு எடுத்துச் செல்வதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வடக்கு, கிழக்கு தமிழ் மீனவர்களுக்கு மீன்பிடிக் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
    அந்தச் செய்திக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன.

    அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன், படைத்தரப்பு அதிகாரிகளுடன் பேசினார்கள், தீர்வுகள்
    பெறப்பட்டன.

    இப்பொழுது முஸ்லீம்கள் சார்பாக இதில் தலையிட்டு பேச யாரும் முன்வரவில்லையா?

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மவ்லவி சுபியான், அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்
    ஆகியோரது கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்று நீதமான தீர்ப்பு
    கிடைக்கப் பெற தம்மாலானதை செய்ய, அழுத்தங்களைப் பிரயோகிக்க
    எல்லா ஊடகங்களும், சமூக அமைப்புக்களும் முன்வர வேண்டும்.

    யாழ் முஸ்லிம் இணையத்தளத்தால் மட்டும் தனித்து இதனை சாத்தியமாக்க முடியும் என தோன்றவில்லை.

    இரும்பு வியாபாரம் படுத்துவிட்டதால் யாழில் குடியேறியுள்ள பல ஏழை முஸ்லீம்கள்
    யாழ்ப்பாணத்தை விட்டும் மீண்டும் வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

    உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை.

    ReplyDelete

Powered by Blogger.