மன்னாரில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஷ்டஈடு
மன்னார் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தமது கடைகளைத் தற்காலிகமாக அமைத்துக்கொள்வதற்குத் தலா 25 ஆயிரம் ரூபா வழங்குவதென்றும், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கடனடிப்படையில் 2 இலட்சம் ரூபாவினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக நடவடிக்கை எடுப்பதென்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சந்தைக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பல்துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
Post a Comment