இலங்கையின் கோழி, முட்டை, குஞ்சு வேண்டாம் என்கிறது குவைத்
இலங்கையிலருந்து கோழி இறைச்சி, கோழி முட்டை, கோழிக் குஞ்சு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக் காய்ச்சல் ஐயம் காரணமாகவே கோழி உற்பத்திப் பொருட்களுக்கு தடை வித்தித்துள்ளதாக குவைத் அரசு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை அவுஸ்ரேலியாவிலிருந்தும் கோழி உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு குவைத் தடை விதித்துள்ளது.
Post a Comment