Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அவசர வேண்டுகோள்

சுற்றாடல் பாதிப்பை குறைத்து, பூவுலகை பாதுகாப்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப் படவுள்ளது. இதன்போருட்டு இன்றிரவு சனிக்கிழமை பூமியை பாதுகாக்கும் மணித்தியாலம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மில்லியன் கணக்கான உலக மக்களுடன் இலங்கையர்களும் இன்றிரவு 8.30 தொடக்கம் 9.30 வரை ஒருமணித்தியாலம் மின் விளக்குகளை அணைத்து இந்த நடவடிக்கையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

பூமியை பாதுகாக்கும் மணித்தியாலத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் பிரதான நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.