Header Ads



தாவரங்களுக்கு இரைச்சல், சத்தம் என்றால் பிடிக்காதாம் - ஆய்வில் தகவல்

மனிதர்கள் மற்றும் விலங்குகளை போன்று தாவரமும் ஒரு உயிரினம்தான். கார் போன்ற வாகனங்கள் மற்றும் எந்திரங்களின் இரைச்சல் சத்தத்தினால் அவற்றின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நியூமெக்சிகோவில் தாவர ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு எந்திரங்கள் மற்றும் வாகன இரைச்சல் மிகுந்த பகுதியில் தாவரங்களை வளர்த்தனர். அவற்றில் பூக்கள் பூத்தல், மகரந்த சேர்க்கை மூலம் விதைகளை உருவாக்குதல், மேலும் அவை பரவுதலில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதே நேரத்தில் மிகவும் அமைதியான பகுதியில் வளர்க்கப்பட்ட தாவரம் வழக்கம்போல தனது பணிகளை செய்தன. இதன் மூலம் அதிக இரைச்சல் சத்தம் தாவரங்களின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.