அமெரிக்கப் படையினர் நாட்டில் இல்லை - இலங்கை இராணுவம் அடித்துக் கூறுகிறது
இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பதாக வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அமெரிக்காவினதோ வேறெந்த வெளிநாட்டினதோ துருப்புகள் தற்போது இலங்கையில் இல்லை என இராணுவப் பேச்சளார் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத ஒழிப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக அமெரிக்காவின் பெண்டகன் உயரதிகாரி அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment