ஊடகவியலாளர்களை துரோகிகளாக வர்ணிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
இலங்கையில் தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள உலகளாவிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி இலங்கையை வலியுறுத்த வேண்டும்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இலங்கை செல்வதாக அறிவித்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரச ஊடகங்கள் சில ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்துக் கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அரச ஊடகங்கள் சில ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் தேசத் துரோகிகள் என வர்ணிக்கின்றன. இந்த செயற்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்பொழுது பல வகையான நாடளாவிய ரவடி அமைப்புக்கள் காணப்படுகின்றன.
ReplyDeleteபோதைப்பொருள் கடத்தல் காரர்களும், பாதாள உலகக் கும்பல்களும்தான் ரவுடிகள் என்று
நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும்.
அரசியல் ரவுடிகள் இருக்கின்றார்கள், இது தவிர ''மனித உரிமை செயல்பாட்டாளர்கள்'' மற்றும்
''ஊடகவியலாளர்கள்'' என்ற பெயர்களில் பெரும்பாலும் தேசத்துரோக ரவுடிகள் செயல்படுகின்றனர்.
இவர்களில் பலர் புலிகளிடம், வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்.
ஒரு உதாரணத்துக்கு சொல்வதென்றால், யுத்த காலத்தில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பெயர்போன
இராணுவ விவகார ஆய்வாளராக விளங்கிய இக்பால் அத்தாஸ் என்பவர் பற்றி குறிப்பிடலாம்.
யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை புலிகளின் பலம் குறித்து கிலாகித்து எழுதிக் கொண்டிருந்த இவர்
யுத்தம் முடிவை நெருங்கிய பொழுது இலங்கையை விட்டு எஸ்கேப் ஆகினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கைது செய்யப் பட்டவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணைகள், வாக்குமூலங்கள், மற்றும் கைப்பற்றப்
பட்ட ஆவணங்களின் மூலம் தெரிவு வந்த உண்மை என்னவென்றால் இக்பால் அத்தாஸ் புலிகளிடமிருந்து பெருந்தொகை பணத்தை
பெற்றிருந்தார் என்ற உண்மையாகும்.
சிரச ஊடகம் பகிரங்கமாகவே தேசத்துரோக ரவுடித்தனம் பண்ணியதை அனைவருமே அறிவார்கள்.
மக்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எனப்படும் இரு பிரிவினர் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும்.