மஹிந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் இல்லை - திஸ்ஸ அத்தநாயக்க
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் நம்பிக்கையிழந்து ஆட்டம் கண்டுவருகின்றது.அதற்கு நீண்டகால ஆயுள் இல்லை என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புரிந்து கொண்டுள்ளார்.
அண்மையில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில் மக்கள் எமது ஆட்சியை விரும்பிவில்லையெனில் அந்த மாற்றம் ஏற்படும் என்று கூறியதை இங்கு நினைவுபடுத்துவதாக தெரிவித்த ஜக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க,அடுத்த ஆண்டில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சி செய்யும் என்றும் கூறினார். புத்தளத்தில் இடம் பெற்ற கட்சி புனரமைப்பு கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டார்.
மக்கள் இந்த ஆட்சியில் பாதிக்ப்பட்டுள்ளனர்.இந்த அரசு மக்கள் குறித்து கவனம் செலுத்துகின்றதா,இல்லையென்றே கூற வேண்டும்.நிவாரணங்கள் குறைக்கப்பட போகின்றது.மக்களுக்கு இலவசமாக வழங்கும் மருந்துகளிலும் கமிஷன் அடிக்கப்படுகின்றது.கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் கற்பிணி தாயொன்றுக்கு தரம் குறைந்த மருந்து வழங்கப்பட்டதால் அவர் மரணமாகியுள்ளார்.இது தான் அரசாங்கத்தின் மோசடி வியாபாரம்,இந்த ஆட்சியாளர்கள் இருந்தால்,மக்களின் நிலை என்னவாகும்,ஆட்சி மாற்றம் தான் இப்பிரச்சினைகளுக்கான தீர்வாகும்.
மக்கள் தமது கோறிக்கைகள முன்வைக்கும் போது அவர்களுக்கு எதிரான துப்பாக்கி நீண்டுள்ளது.இந்த கலாசாரம்மாற்றப்பட வேண்டும் அதற்கு நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியுள்ளது.புத்தளம் தமிழ்.முஸ்லிம்,மக்கள் என்றும் ஜக்கிய தேசிய கட்சியுடன் தான் இருக்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம் .
அரசின் ஆயுள் குறைந்து வருவதால் மக்களது எதிர்காலம் மீண்டும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் பிரகாசிக்ககப் போகின்றது என்ற நல்ல செய்தியினை கூறுவதாக செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
Post a Comment