Header Ads



கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தினுள் கொள்ளை - புராதன வாள், நாணயங்கள் களவு போயின

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்த பொருட்கள் பலவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அருங்காட்சியகத்தினுள் நேற்றிரவு திருடர்கள் புகுந்துள்ளதாக கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்தின் இரண்டாம் மாடியின் ஒரு பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். விலைமதிக்க முடியாத புராதன பெறுமதியுடைய வாள் மற்றும் நாணயங்கள் உட்பட ஒருதொகை பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதுடன்,  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாவதாக கொழும்பு தேசிய நூதனசாலை என அறிமுகப்படுத்திய தற்போதைய தேசிய நூதனசாலையினை 1877 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்போதைய இலங்கை ஆளுனரான வில்லியம் கெக்கரி அதன் ஆதி கர்த்தா ஆவார்.

ஆசிய அரச சங்கத்தின் இலங்கைக் குழுவினால் ஒரு பிரபல நூதனசாலயில் தேவைப்பாடை 1872 ஆம் ஆண்டில் கெக்கரி ஆளுனராக பதவி ஏற்றதும் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்தாலி மனகட்டிட நிர்மாணித்தலுக்கமைய புதிய கட்டிடத்திற்கான வரைபடத்தினை, பிரசித்த வேலைத் திணைக்களத்தின் கட்டிடக் கலை விஞ்ஞானியான ஜே.ஜி.ஸ்மிதரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணிப்பு வலைகள் 1876ல் இறுதியடைந்த்துடன் அடுத்த ஆண்டில் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.