Header Ads



அல்ஜீரியாவில் மீண்டும் எழுச்சிபெறும் இஸ்லாமிய கட்சிகள்

அல்ஜீரியாவில் வரவிருக்கும் தேர்தலில் மூன்று பிரபல இஸ்லாமிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மூவ்மெண்ட் ஃபார் தி சொசைட்டி ஆஃப் பீஸ்(எம்.எஸ்.பி), அந்நஹ்ழா, தி அல் இஸ்லாஹ் ஆகிய கட்சிகள் இணைந்து க்ரீன் அல்ஜீரியன் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

நாட்டின் இதர இரண்டு பிரபல இஸ்லாமிய கட்சிகளான ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் லிபர்டி மற்றும் தி மூவ்மெண்ட் ஃபார் சேஞ்ச் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க மறுத்துள்ளன. வருகிற மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அல்ஜீரியாவில் ஒரே கட்சி ஆட்சி 1989-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பின்னர் நடந்த தேர்தலில் இஸ்லாமிக் சால்வேஷன் ஃப்ரண்ட் வெற்றிப்பெற்ற பிறகும் ராணுவம் ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை.

No comments

Powered by Blogger.