இலங்கை வெளிவிவகார அமைச்சில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. அதிகாரி வேலை - திவயின பத்திரிகை
இலங்கை வெளிவிவகார அமைச்சில் கடமை புரியும் பெண் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இன்றைய (24) திவயன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில், யோசனை ஒன்றை கொண்டு வரும் சூழ்ச்சியில், தேசத்துரோகியாக, வெளிநாட்டுச் சக்திகளுக்கு உதவிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்தப் பெண் அதிகாரி ஒருவர் தொடர்பாகத் தற்போது தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள திவய்ன, இந்தப் பெண் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று இரவு அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இணைந்து, இந்தப் பெண் அதிகாரிக்கு ஆடம்பர விடுதி ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment