Header Ads



அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இணையத்தில் கையொப்பம் திரட்டல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிக்கக் கோரி 500 கையெழுத்துகளை சேகரிப்பதற்கான மனு ஒன்று இணைத்தளங்களில் வலம் வருகிறது.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவி லோரா டுபுய் லஸரே இம்மனுவில் கோரப்பட்டுள்ளார்.

change.org (சேன்ஜ்.ஓர்க்) எனும் அமெரிக்க சமூகசேவை நிறுவனமொன்றின்  இணையத்தளத்தில் இலங்கைக்கான இலங்கையர்கள் எனும் பெயரில் இந்த மனு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நேற்றுவரை இலங்கை, அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, வியட்நாம், ஒமான், டுபாய் உட்பட பல நாடுகளிலிருந்து சுமார் 365 பேர் இதில் கையெழுத்திட்டிருந்தனர்.

1 comment:

  1. நாம் அனைவரும் இதில் பங்களிப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.