Header Ads



இம்முறை ஹஜ் செல்வோர் நேர்முகப் பரீட்சை மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர் - பௌஸி

ஹாஜிகளை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்வதற்காக ஹஜ் முகவர்கள் எவருக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களின் பதிவுப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் அதன் பின்பே ஹஜ் முகவர்கள் தமது செயற்பாட்டினை முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நவமணிக்குத் தெரிவித்தார்.

ஹஜ் முகவர்கள் பதிவு இன்னும் இடம்பெறாதுள்ள நிலையில் இந்த ஆண்டு ஹஜ் கடமைக்குச் செல்வதற்காக எவரும் தமது கடவுச் சீடடுக்களை, தஸ்தாவேஜுகளை முகவர்களிடம் கையளிக்க வேண்டாமென்றும் இறுதி நேரத்தில் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதற்கு இது உதவியாயிருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு ஹஜ் கடமைகளுக்குச் செல்வதற்காக 4600 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களை நேரடியாக சந்தித்து விபரங்களைக் கேட்டறியும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும். இதன் போது ஹஜ் கடமைக்குச் செல்லும் 2800 ஹாஜிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன்பின்பே இவர்கள் ஹஜ் முகவர்களுடாக தமது கடமையை நிறைவேற்றச் செவதற்கான வாய்ப்பும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.