சர்வதிகாரி ஆசாத்திற்கு எதிராக குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம்
சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை தொடரும் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஃப்ரீ சிரியன் ஆர்மிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க குவைத் அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கோரிய பாராளுமன்றம், பஸ்ஸார் அரசுடன் எல்லாவிதமான உறவுகளையும் குவைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
போராளிகளுக்காக நிதி திரட்டவேண்டும், குவைத்தில் வசிக்கும் சிரியாவாசிகளுக்கு அவர்களுடைய உறவினர்களை சிரியாவில் இருந்து குவைத் அழைத்து வர வசதிகளை ஏற்பாடுச் செய்தல் ஆகியன தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக 2-வது தினமாக சிரியா விவாகாரம் குறித்து குவைத் பாராளுமன்றம் விவாதித்துள்ளது. சிரியா நேசனல் கவுன்சிலை நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment