Header Ads



வடக்கு முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தபோது இராணுவம் தடுக்கவில்லை - விக்கிலீக்ஸ்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டமை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 72,000 முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர், வட மாகாணத்தை விட்டு வெளியேறுகின்றமைக்கு பல இடங்களிலும் புலிகளால் 48 மணித்தியால அவகாசம்தான் கொடுக்கப்பட்டு இருந்தது.

48 மணித்தியாலங்களுக்குள் வெளியேற தவறுகின்ற பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் வட மாகாணத்தில் நிலை கொண்டு இருந்த அரச படையினர் இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை தடுக்கத் தவறி விட்டனர் என்று முக்கியமாக இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தூதுவர் Patricia Butenis இந்த ஆவணத்தை எழுதி அனுப்பி இருக்கின்றார்.

2 comments:

  1. LTTE யினர் சுயனலத்திட்காகவும் பொருளிற்காகவும்
    வெளியேற்றினார்கள்,அப்போது யாழ் அறிஞர்களிடம் யாம் கூறினோம் ltte யினர் கப்பலின் 2 ம் தட்டில் இருந்துகொண்டு அடித்தட்டில் இருப்பவர்களை கருத்தில்கொள்ளாது அதில் துளை போட்டு பெரிய சுறா பிடிக்க நினைக...ின்றார்கள் கடைசியில் அடித்தட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து 2 ம் தட்டில் உள்ளவர்க லும் அழிவார்கள் என்றோம்.
    சொல்லி வாய் மூடல முள்ளிவாய்க்காள் நான் சொல்றத யார்டா கேக்றான்..."எப்பொருள் யார் யார்" ....mmmmm

    ReplyDelete
  2. தகவல் தவறானது.
    இதனைத் தடுக்க ராணுவத்துக்கு எந்த வழியும் இருக்கவில்லை.
    புலிகள் தமது கட்டுப் பாட்டில் இருந்த பிரதேசங்களில் இருந்தே வெளியேற்றினார்கள்,
    ராணுவத்துக்கே எங்கே போக முடியாது என்பதுதான் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.