யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்! என்ன நடக்கின்றது..? முபீன் வெளிநாடு பறந்தார்..??
2012 மார்ச் 7ம் திகதி யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 2012 பெப்ரவரி 4,5,6, மற்றும் 7ம் திகதிகளில் நடைபெற்ற “யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்” தொடர்பான விடயங்களும் நிதி விடயங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இதன் முடிவில் சம்மேளனத்தின் அடுத்த பொதுசபைக் கூட்டம் ஏப்ரல் முதலாம் திகதி கூட்டப்படும் என்றும் அங்கே சம்மேளனத்தின் அடுத்த தவணைக்கான கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டு அங்கத்தினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைவர் தெரிவு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக மாறிவிட்டது, தற்போதைய தலைவர் சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் அடுத்த தவணைக்கு தெரிவு செய்யப்பட முடியாது, அதாவது யாப்பின் பிரகாரம் ஒருவர் தொடர்ந்தும் இரண்டு தவணைகளுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட முடியாது என்பதாகும்.
இந்நிலையில் தற்போதைய தலைவர் இந்தியா சென்றுவிட்டார், இங்கே உள்ள கேள்வி என்னவென்றால் ஏப்ரல் முதலாம் நாள் சம்மேளனத்தின் கூட்டம் இருக்கின்றது என்பதை அறிந்த நிலையில் ஒரு பொறுப்புள்ள தலைவர் எவ்வாறு வெளிநாடு செல்ல முடியும். அப்படித்தான் ஒரு முக்கியமான காரியம் நிமித்தம் வெளிநாடு சென்றாலும், அதுகுறித்து ஏற்கெனவே செயலாளருக்கும் உப தலவருக்கும் அறிவித்து கூட்டத்தை நடாத்துவதற்கான இதர ஏற்பாடுகள் அல்லது கூட்டத்தை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும், ஆனால் அப்படியான ஏற்பாடுகள் எதுவும் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை, அதுமாத்திரமல்லாது செயலாளரையோ அல்லது உப தலைவரையோ தொடர்புகொண்டதாகவோ எமக்கு அறியக்கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2012 மார்ச் 27 இரவு 9.00 மணியளவில் சம்மேளனத்தின் பொருளாளர்; செயலாளரைத் தொடர்புகொண்டு, “யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்” நிகழ்வின் வரவு செலவு விபரங்கள் இன்னமும் சீராகவில்லை எனவே கூட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என்று கேட்டுள்ளார், அதற்கு செயலாளர் குறித்த கூட்டத்திற்கான முடிவானது செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும், எனவே தான் தனித்த்உ முடிவுகளை எடுக்க முடியாது கூட்டம் தொடர்பில் செயற்குழுவில்தான் முடிவு எடுக்க முடியும், அதுவரை நாம் இப்போது மேற்கொண்டுள்ள முடிவின் அடிப்படையில் கூட்டத்தை நடாத்த நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார், அதனைத்தொடர்ந்து தற்போதைய தலைவருக்கு விசுவாசமான ஒருவரும் தொலைபேசியில் செயலாளருடன் தொடர்புகொண்டு தலைவர் வெளிநாட்டில் இருக்க்கின்றார் எனவே கூட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என்று கோட்டுள்ளார் (இந்த இடத்திலும் தலைவர் செயலாளரைத் தொடர்புகொள்ளவில்லை)
அதன் பின்னர் செயலாளர் சம்மேளனத்தின் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்லிவாயல் தர்மகர்த்தாக்களுடன் தொடர்புகொண்டு நிலைமையினை விளக்கிச்சொல்லி கூட்டத்தை நடாத்துவது தொடர்பில் ஆராய்ந்துள்ளார், அவர்கள் அனைவரும் கூட்டத்தை ஏற்கெனவே தீர்மானித்ததன் பிரகாரம் நடாத்தும்படி வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய சம்மேளனத்தின் கூட்டம் திட்டமிட்டபடி ஏப்ரல் முதலாம் நாள் காலை 10.00 மணிமுதல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் முஸ்லிம் இணையத்தில் சகோ.முபீன் அவர்களை மேற்கோள்காட்டி ஒரு பகிரங்க மடல் பிரசுரிக்கப்பட்டிருந்தது, இதன்பிரகாரம் மேற்படி கூட்டத்தை தன்னுடைய பெயரைக் கொண்டு ஒருசிலர் குழப்ப முயற்சிப்பதாக எழுதப்பட்டிருந்தது. அதேவேளை தலைவர் வருகை தர முடியாதிருப்பதால் கூட்டத்தை பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கும்படி கோரிக்கை விடுத்து கையொப்பம் திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது, இதனை தற்போதைய தலைவருக்கு ஆதரவான ஒருவரே முன்னின்று மேற்கொள்கின்றார்.
எனவே இங்கே ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாக உணரத்தோன்றுகின்றது. இதுகுறித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம் மக்களிடம் வினவியபோது “ இது நடக்கு என்று ஏற்கெனவே தெரியும், தலைமைத்துவத்திற்கு ஆசைகொண்டு, தாமே தொடர்ந்தும் பதவிகளில் தங்கியிருக்கவேண்டும் என்று நினைக்கின்றவர்களின் செயற்பாடுகள்தான் இவையென்றும், சம்மேளனத்தின் மூலம் ஏற்பட்டிருக்கும் சமூக ஒற்றுமையினை விரும்பாத அதனால் ஒருபலமிக்க சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை வளர்ந்துவருவதைத் தடுக்கும் சக்திகளின் முயற்சியே இது” என்றும் மக்கள் கருதுகின்றார்கள்.
ஒரு பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்றவகையில் யாழ்முஸ்லிம் இணையம் நாம் எவருக்கும் பக்கச்சார்பாக செயற்படமுடியாது, தகவல்களை மக்களுக்காக தருகின்றோம் தீர்மானங்களை மக்களே மேற்கொள்ள வேண்டும்.
இங்கே ஏதோ தவறுகள் நடக்கின்றன என்பது தெளிவாகி விட்டது. சுய நலன்களும் பொது நலன்களும் ஒன்றை ஒன்று வீழ்த்த களத்தில் இறங்கி விட்டன. பத்திரிக்கைகாரர்களுக்கு கொழுத்த வேட்டை தான். கிண்டப்படப்போகும் சேற்றின் நாற்றத்தையும் சகிக்க பழகிக் கொள்ளுங்கள்.
ReplyDeleteயாழ்முஸ்லிம் இணைய தளத்திற்கு!
நவீன மயப்படுத்தப்பட்டு விட்ட தகவல் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்திகொள்ளுங்கள். எந்த செய்திகளையும் முடிந்த அளவு விசாரணை செய்து, சரியானவற்றை மட்டும் ஆடியோ & வீடியோ கலந்த கோவைகளாக பிரசுரிக்க முயலுங்கள். இது உங்கள் இணைய தளத்தின் மீதுள்ள உண்மைத்தன்மையின் அளவை அதிகரிக்க உதவும்.
நாடகம் நடிக்க பல நடிகர்கள் இப்பொழுதே தயார்
ReplyDeleteஆகி விட்டார்கள்.அவ்வளவு பிசியாக இருக்கின்றார்கள்.
சம்மேளனத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பொருப்பு வாய்ந்த ஊடகம் என்றால் செய்திகளின் உண்மை நிலை அறிந்து நல்ல செய்தி நிருபர்களுடைய செய்தியாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை அறிந்து வெளியிடுங்கள்.
ReplyDelete