Header Ads



நீங்கள் காலை உணவு சாப்பிடுவதில்லையா..? இதை வாசிக்கத் தவறாதீர்கள்..!


காலை உணவை தவறாமல் சாப்பிடுபவர்களை விட, அதை தவிர்ப்பவர்களுக்கு மன அழுத்தம், நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இன்றைய நவீன காலத்தில் காலை நேரத்தில் அவசர, அவசரமாக வேலைக்கு புறப்படுபவர்களில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் வழக்கமாகவே காலையில் சாப்பிடுவதில்லை. அதே போல், இரவில் மது அருந்தி விட்டு தாமதமாக படுக்கைக்கு செல்வோரும் காலையில் உணவை விட்டு விடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். இது குறித்து இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு விவரம், ஆய்வில் காலை உணவு சாப்பிடுபவர்கள், அதை தவிர்ப்பவர்கள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டனர். காலையில் சாப்பிட்டதால் மனம், உடலளவில் உற்சாகமாக இருந்ததுடன் அன்று முழுவதும் மன அழுத்தமின்றி சவாலான பிரச்னையை கூட திறம்பட கையாண்டதாக 89 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

ஆய்வில் நடந்த ஆங்கிலம், கணிதம் உட்பட 25 போட்டிகளில் காலையில் உணவு சாப்பிட்ட 61 சதவீதம் பேர் சிறப்பாக செயல்பட்டனர். சாப்பிடாத 75 சதவீதம் பேர் போட்டிகளில் சில தவறுகள் செய்தனர். மனசோர்வுடனும் காணப்பட்டனர். ஆய்வில் பங்கேற்ற 2000ல் 48 சதவீதம் பேர், வார வேலை நாட்களில் குறைந்தது ஒரு நாளாவது காலையில் சாப்பிடுவதில்லை. மேலும், 25 முதல் 35 வயதுடையோரில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சாப்பிடாததால் மன உளைச்சல், சோம்பலை உணர்வதுடன், சிடுசிடுப்புடன், சரியாக வேலை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.