இலங்கையின் வீடமைப்பு திட்டத்திற்கு உதவ முன்வருகிறது எமிரேட்ஸ்
ஜனசெவன 10 இலட்சம் வீடமைப்புத் திட்டத்திற்கு உதவ தயார் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியளித்துள்ளது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஜக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவர் முஹமட் அல் முஹமட் மொஹமுத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போதே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சினால் நாடு முழுவதிலும் ஜனசெவன 10 இலட்சம் வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment