மன்னாரில் எண்ணெய் அகழ்வு பணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பிடிவாதம்
மன்னார் கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் அகழ்வுப் பணிகள் முழுவதையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம், இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் உள்ள எண்ணெய் வளத்துண்டங்களானது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருப்பதால் அவற்றை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க இந்திய விரும்பவில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளினதும் எண்ணெய் வள அமைச்சர்களும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட அகழ்வு ஆய்வின் போது, மன்னார் கடற்பரப்பில் வாயுப் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு ரஸ்யா, சீனா, மலேசியா, மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. இதுபற்றி அந்த நாடுகள், இலங்கையுடன் முதற்கட்டப் பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளன.
எனினும், இலங்கையில் சீன நிறுவனங்கள் மன்னார் பகுதியில் கால்பதிப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment