அதிபரின் முறையற்ற நிர்வாகம் - பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் வடக்கு கோட்ட மட்டத்தில் ரெட்பானா கிராமத்தில் அமைந்துள்ள கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 7ஆம் ஆண்டு வரை 160 மாணவர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலையில் சுமார் 80 மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்கின்றனர்.
மாணவர்ளின் தொகை இவ்வாறு குறைவதற்குக் காரணம் பாடசாலை அதிபரின் முறையற்ற நிர்வாகமே என பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இன்று தமது பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாது வீட்டில் தடுத்து வைத்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் யாரும் அற்று ஓரிரண்டு ஆசிரியர்களை மாத்திரம் கொண்டு காட்சியளிக்கிறது.
முறையற்ற நிர்வாகத்தை நடத்தும் அதிபரை நீக்கக் கோரி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலையின் அதிபரை நீக்கீ புதிய அதிபரை நியமிக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்துள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
Post a Comment