உலக சாதனை ஆசை - உயிருக்கு உலைவைத்தது - கந்தளாயில் சோகச் சம்பவம்
உலக சாதனை ஒன்றை நிகழ்த்தும் நோக்கில் களமிறங்கிய 24 வயது இளைஞன் ஒருவர் இந்த உலகைவிட்டே பிரிந்த சம்பவமொன்று வான்எல - பன்சல்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நிலத்திற்கு அடியில் மறைந்திருந்து உலக சாதனை நிலைநாட்டும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த இளைஞன் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.
இதன்படி தன்னால் வெட்டப்பட்ட 10 அடி ஆழமான குழியில் இறங்கிய இளைஞன், கல் மண் கொண்டு தன்னை மூடிவிடுமாறு தனது உதவியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு கல், மண் இட்டு மூடிய உதவியாளர்களுக்கு மாலை 4 மணிக்கு மீண்டும் தோண்டிப் பார்க்குமாறும் சாதனை படைக்க முயன்ற இளைஞன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாலை 4 மணி அளவில் நிலத்தை தோண்டிப் பார்த்தபோது குறித்த இளைஞன் அபாய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்தபோது உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்த இளைஞன் சிவில் பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment