சி.என்.என். செய்தி சேவை ஸ்தாபகரின் மறுபக்கம்
"சி.என்.என்' செய்திச் சேவையின் ஸ்தாபகரும் செல்வந்தருமான டெட் டேர்னர் (73 வயது) மாதமொன்றில் ஒவ்வொரு வாரத்தையும் வெவ்வேறு காதலிகளுடன் கழித்து வருவதாக "த டெகிகிராப்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரேர்னர் தனது மூன்றாவது மனைவி ஜேன் பொன்டாவை 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவரும் பொன்டாவும் 10 வருட காலம் இணைந்து வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. 14 விடுமுறை வாசஸ்தலங்கள் உட்பட 28 ஆடம்பர வீடுகளுக்கு சொந்தக்காரரான டெட் ரேர்னர் மாதமொன்றில் ஒரு வாரத்திற்கு ஒரு காதலியுடன் பொழுதைக் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய தனிப்பட்ட நில உரிமையாளராக விளங்கும் டெட் ரேனரின் சொத்து 2 பில்லியன் அமெரிக்க டொலராகும். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியுள்ளார்.
Post a Comment