Header Ads



சவூதி அரேபியா சிறைகளில் 92 இலங்கை பெண் சகோதரிகள் தடுத்துவைப்பு

சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பினைப் பெற்று சென்ற இலங்கையைச் சேர்ந்த 92 பேர் தற்போது அனாதரவான நிலையில், சவுதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேலை வழங்குனரால் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளான நிலையில், தற்போது சிறையடைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த விடயம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டு வினவியது. சவுதி அரேபியாவில், சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்த இலங்கைப் பணிப்பெண்கள் இவ்வாறு சிறை அடைக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவர்களை இலங்கைக்கு மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் ஈடுபட்டு வருவதாகவும் பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.