உலகில் 80 கோடி பேர் அசுத்தமான குடிநீர் அருந்துகின்றனர் - இந்தியாவில் 60 கோடி பேருக்கு கழிப்பறை வசதியில்லை
உலகில் சுத்தமான தண்ணீர் கிடைக்காதவர்களுடைய எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்களில் முதலாவது இலக்கு, 2015 என்ற காலக்கெடுவைத் தொடுவதற்கு முன்பாக இப்போதே எட்டப்பட்டுள்ளது என ஐ.நா.மன்றம் கூறுகிறது.
உலகின் 89 சதவீதம் மக்களுக்கு தற்போது மாசுபடாத குடிநீர் ஆதாரங்கள் இருப்பதாகத் ஐ.நா. தெரிவிக்கிறது. அப்படியானால் உலகில் இன்னும் கிட்டத்தட்ட 80 கோடிப் பேர் இன்னும் அசுத்தமான குடிநீரை அருந்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் 40 சதவீதமானோர் சஹாராவுக்கு தெற்கில் அமைந்துள்ள நாடுகளில் வாழக்கூடியவர்களாக இருக்கின்றனர். இந்த புத்தாயிரம் லட்சியத்தின் மறுபாதியான சுகாதாரமான கழிப்பிட வசதிகள் என்ற இலக்கை எட்ட வாய்ப்பு இல்லை என்றும் ஐ.நா.கூறுகிறது.
ஏனென்றால் இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருந்துவருகின்றனர்
Post a Comment