Header Ads



இத்தாலியில் ரூ. 7.500 கோடி மதிப்பிலான கடாபியின் சொத்துக்கள் முடக்கப்பட்டன


லிபியா அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக் கள் போராட்டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர். இதையடுத்து தலைமறைவாக சாக்கடை குழாய்க்குள் பதுங்கி இருந்த அவர் புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் லிபியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

லிபியாவில், கடாபியின் ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர நகைகள் மற்றும் கோடிக்கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபியும், அவரது குடும்பத்தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அங்குள்ள பாங்கிகளில் பணம் மற்றும் தங்க, வைர நகைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது அவையும் கண்டுபிடித்து முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப் பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிலங்கள், பல கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த பங்கு முதலீடுகள் போன்றவை இதில் அடங்கும்.

No comments

Powered by Blogger.